முன்பு சில காண்டன் நிர்வாகங்கள் பள்ளி மாணவிகளுக்கான தலைக்கவசத் தடை உத்தரவை வெளியிட்டிருந்தன. இதன் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து உச்சநீதிமன்றம் (ஃபெடரல் உச்ச நீதிமன்றம்) முக்கியமான தீர்ப்பொன்றை வழங்கியது. அந்த தீர்ப்பில் அரசு பள்ளிகளில் குழந்தைகள் தலைகவசம் அணிவதை பொதுவாக தடை செய்வது அரசியலமைப்புக்கு முரணானது என கூறப்பட்டது.
மேலும் அரசு மற்றும் அதன் கல்வி நிறுவனங்கள் மதச் சின்னங்கள் தொடர்பாக நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதனாலேயே பள்ளிகளில் குழந்தைகள் தலை கவசம் அணிவதை முழுமையாக தடை செய்யும் பொது விதிக்கு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மொத்தத்தில் அரசு மதச் சுதந்திரத்தையும் மதிக்கும் நோக்கில், குழந்தைகளுக்கான தலைக்கவசத் தடை தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.





























