படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நேற்று (25) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் மாலை நேரத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, அன்னாரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவு நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

குறிப்பிடத்தக்கது என்னவெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி நள்ளிரவு, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading