கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், இடிபாட்டுக்குள் சிக்குண்டிருந்த மேலும் நான்கு பேர் தற்போது மாவனெல்ல ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், குறித்த அனர்த்தத்தில் சிக்குண்டு மொத்தமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மற்றும் குடியிருப்பு மீது, நேற்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தது.
இதனையடுத்து, இடிபாட்டுக்குள் சிக்குண்டவர்களைத் தேடும் பணிகள் சுமார் 10 மணிநேரம் நீடித்தன.
இந்தநிலையில், ஆபத்தான சூழ்நிலை காரணமாக, கொழும்பு கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ முதல் மாவனெல்ல வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.





Leave a Reply