இந்த சலுகை மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கும், அவர்கள் பராமரிப்பாளர்களாக செயல்படும் துணைவர், பிள்ளை அல்லது பெற்றோருக்கும் பொருந்தும். சலுகையைப் பெற மாற்றுத்திறனாளி ஊழியர்கள் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் மாற்றுத்திறனாளர் அட்டை போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பராமரிப்பாளர்கள் தங்களின் உறவு தொடர்பை உறுதி செய்யும் ஆவணம் மாற்றுத்திறனாளியின் மிதமான அல்லது கடுமையான நிலையைச் சான்றிடும் ஆவணம் மற்றும் அவர்கள் முக்கிய பராமரிப்பாளராக இருப்பதை உறுதி செய்யும் அதிகாரப்பூர்வ சான்றையும் வழங்க வேண்டும்.
இந்த புதிய சட்டம் வேலைத்தளங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் மேம்பட்ட ஆதரவு மற்றும் வசதியை வழங்குவதோடு, சமூக பொறுப்பை உயர்த்தும் முன்னோடித் தீர்மானமாக கருதப்படுகிறது.






























