சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பாதுக்கை வட்டரக்க திறந்தவெளி சிறைச்சாலையில் இயங்கும் விசேட பாடசாலையில் கல்வி கற்ற தடுப்புக்காவலில் உள்ள 6 மாணவர்கள் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரக் கல்விக்குத் தகுதி பெற்றுள்ளனர். கைதிகளுக்காக பிரத்தியேகமாக இயங்கும் இலங்கையின் ஒரேயொரு பாடசாலையான வட்டரக்க பாடசாலையிலேயே இம்மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

பல்வேறு சமூக மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கல்வியை இடைநிறுத்தியிருந்த சிறுவர்கள் நீதிமன்றங்களின் உத்தரவின் பேரில் இங்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் கல்வித் திணைக்களத்தின் கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை மாணவர்களின் கல்வித் திறனுக்கு ஏற்ப விரைவான கல்வி திட்டங்களை வழங்கி வருகிறது. இம்முறை பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்றுள்ளமை கல்வி மூலம் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகப் பாராட்டப்படுகிறது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்