சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இலங்கை ரயில்வே இணையதளம் மீது இடம்பெற்ற சைபர் தாக்குதல் காரணமாக ரயில் அட்டவணை (train schedule) அமைப்பு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (14) பதிவான இந்த சம்பவத்தில் இணையதளத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற அனைத்து சேவைகளும் வழக்கம்போல் செயல்படுவதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் அட்டவணை பகுதி உடனடியாக முடக்கப்பட்டுள்ளதாகும் பயணிகள் எந்த வித இடையூறும் இல்லாமல் பிற தகவல் சேவைகளை பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தற்காலிகமானது எனவும் தேவையான பாதுகாப்பு மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இணைய பாதுகாப்பு குழுக்கள் தற்போது நிலைமையை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றன. இந்த சைபர் தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது. அதன் பின்னணி என்ன என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

ரயில்வே துறை சேவைகள் முழுமையாக மீண்டும் இயல்பாக இயங்கும் வரை பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலதிக தகவல்கள் விசாரணைக்கு பிறகு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்