இந்த நிலை நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் மாற்று மோதல் தீர்வு நடைமுறைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார். மேலும் சட்டத்தரணிகளின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாகவும் ஒரு மனிதக் கொலை வழக்கிற்கான சட்டச் செலவுகளை ஏற்க முதலில் காணியை விற்ற பின்னர் சிறுநீரகத்தையே விற்க முன்வந்த சம்பவத்தை எடுத்துக்காட்டியும் கவலை வெளியிட்டார்.
சட்டத்தரணிகளின் கட்டணத்தை கண்காணிக்கும் அதிகாரம் அரசுக்கோ உயர்நீதிமன்றத்துக்கோ இல்லாததால் அவர்கள் மனசாட்சிக்கு அமைவாக நியாயமான கட்டணத்தை மட்டுமே அறவிட வேண்டும் என்றும், வசதியற்றவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கி நீதியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட வலியுறுத்தினார்.



























