சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இஸ்ரேலில் நேற்றிரவு இலங்கை தொழிலாளி ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

டெல் அவிவ் நகரின் கடற்கரை பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் காலி, படபொல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இவர் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலைக்காகச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதன் காரணமாக, அவர் இலங்கையரைக் கொலை செய்துள்ளதாக நிமல் பண்டார கூறினார்.

இதன்படி, சந்தேகநபரை கைது செய்வதற்காக இஸ்ரேல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading