இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு இருந்த 1,033 கைதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் கலவரத்தை வழிநடத்தியதாகக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷும் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இதுவரை மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் 7 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிகாரிகள் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.



























