சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இளைஞர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் வாழ்க்கைச் செலவு உயர்வால் பொதுமக்களும் இளைஞர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

குறிப்பாக துவிச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு எரிபொருள் செலவு பெரும் சுமையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள தற்போதைய சூழ்நிலையில் அதன் நன்மை மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் வரி மற்றும் எரிபொருள் செலவுகள் மூலம் மக்கள்மீது மேலும் சுமை ஏற்றாமல் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்