உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினியிடம் பத்து முக்கிய கேள்விகளை முன்வைப்பதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,குண்டுத்தாக்குதலால் அரசியல் ரீதியாக சிலர் பயனடைந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் பதவி நீட்டிப்புகளைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.
மேலும் சுரேஸ் சலே தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் விசாரணை நடவடிக்கைகளில் அழுத்தம் செலுத்தும் வகையிலான கருத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் வெளிப்படைத்தன்மையுடனும் ஆதாரங்களுடனும் இருக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.







Leave a Reply