World News, மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பாதுகாப்பு பதற்றத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை (U.S. State Department) அவசர பாதுகாப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள Worldwide Caution அறிவிப்பில் மத்திய கிழக்கின் பாதுகாப்பு சூழ்நிலை எப்போது வேண்டுமானாலும் மேலும் மோசமடையக்கூடிய ஆபத்து நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் தங்கியிருக்கும் அல்லது பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் விமான சேவைகள் திடீர் ரத்து செய்யப்படுதல், வான்வெளி தற்காலிகமாக மூடப்படுதல் மற்றும் பயணத் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால் பயணத் திட்டங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மத்திய கிழக்கிற்கு வெளியேயுள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அமெரிக்க நலன்கள் தொடர்பான இடங்களும் இலக்காக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.World News
ஈரானுக்கு ஆதரவான குழுக்கள் உலகின் பல பகுதிகளில் அமெரிக்க நலன்களை குறிவைக்கக்கூடும் என்பதால் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்களும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இந்த உலகளாவிய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச பாதுகாப்பு நிலைமையை தொடர்ந்து மதிப்பீடு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க அரசு தனது குடிமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.













Leave a Reply