கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் சிறைச்சாலைக்குள் குழப்பமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் பெண் கைதிகள் குழுவொன்று வாரியபொல சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு இருந்த அனைத்து பெண் கைதிகளும் முழுமையாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நிர்வாக நடவடிக்கைகளை சீரமைப்பதற்கும் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



























