சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இறந்த ஒருவரின் வங்கி கணக்குகளை மூடும் போது வங்கிகள் வசூலிக்கும் “வாரிசு வங்கி கட்டணங்களுக்கு” அரசு சட்டப்படி வரம்பு நிர்ணயித்துள்ளது. 2025 நவம்பர் 13 முதல் இந்த கட்டணம் இறந்தவரின் அனைத்து கணக்கு இருப்பு மற்றும் சேமிப்பு தொகைகளின் மொத்த மதிப்பின் அதிகபட்சம் 1% மட்டுமே ஆகும் என நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2026 ஜனவரி 1 முதல் எந்த சூழ்நிலையிலும் இந்த கட்டணம் €857-ஐ மீறக்கூடாது என புதிய உச்சவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது (2025 நவம்பர் 13 முதல் டிசம்பர் 31 வரை இது €850 ஆக இருந்தது).

இந்த தொகை ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் தேசிய புள்ளிவிவர மற்றும் பொருளாதார ஆய்வு நிறுவனம் (Insee) வெளியிடும் பணவீக்க கணக்கீட்டின் அடிப்படையில் புதுப்பிக்கப்படும். மேலும் சில சந்தர்ப்பங்களில் இந்த கட்டணங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

அதாவது கணக்குகள் சிறாரின் பெயரில் இருந்தால் அல்லது இறந்தவரின் மொத்த கணக்கு மற்றும் சேமிப்பு இருப்பு €5,965-க்கு குறைவாக இருந்தால் அல்லது வாரிசுகள் அனைவரும் கையொப்பமிட்ட வாரிசு சான்றிதழை வங்கிக்கு சமர்ப்பித்து, வாரிசு நடைமுறையில் சிக்கல் ஏதுமில்லை என்றால் வங்கிகள் எந்தக் கட்டணமும் வசூலிக்க முடியாது.

இறந்தவரின் பண விவரங்களை கணக்கிடுதல், வாரிசுகளுக்கு தொகை மாற்றம், நோட்டரியுடன் தொடர்பு கொள்ளுதல் போன்ற பணிகளுக்காகவே இந்த “estate bank fees” வசூலிக்கப்படுகின்றன.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading