சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தை மீறி முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count – FBC) ஒன்றுக்கு நோயாளிகளிடம் கூடுதல் தொகை அறவிட்டதை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணம் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் ரூ.3 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நிர்ணயித்தபடி FBC பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் ரூ.400 ஆக இருந்த போதிலும் குறித்த வைத்தியசாலை ரூ.550 அறவிட்டது ஜூலை 13ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கண்டறியப்பட்டது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இதையடுத்து அதிகாரசபை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் ஜூலை 21ஆம் தேதி விசாரணையின் போது வைத்தியசாலை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் ரூ.3 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டதுடன் செய்த தவறுக்காக தங்களது சொந்தச் செலவில் பிரதான பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வுகூடங்களில் சேவைகளைப் பெறும் பொதுமக்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை சரிபார்த்து கட்டாயம் பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூடுதல் கட்டணம் அறவிடப்பட்டால் 1977 என்ற அவசர இலக்கத்தின் மூலம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையில் முறைப்பாடு செய்யுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்