சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

கிரீன்லாந்தின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய முகமாக நீண்ட காலமாக அறியப்பட்ட இனுயிட் செயற்பாட்டாளர் மற்றும் கவிஞர் அக்காலுக் லின்ஜே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கிரீன்லாந்து குறித்த தீவிர நிலைப்பாட்டுக்கு பின்னர் தனது பார்வையை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்பு டென்மார்க்கை “காலனித்துவ ஆட்சியாளர்” என கடுமையாக விமர்சித்து கிரீன்லாந்து முழுமையான சுதந்திரம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த அவர் தற்போது அமெரிக்க அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பதற்காக கிரீன்லாந்து டென்மார்க்குடன் இணைந்தே தொடர வேண்டும் என்று கருதுகிறார்.

டிரம்ப் மீண்டும் கிரீன்லாந்தின் மீது அமெரிக்க கட்டுப்பாட்டை கோரி கருத்து வெளியிட்டதையடுத்து தீவின் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல கிரீன்லாந்து மக்களிடையே அமெரிக்காவின் நோக்கங்கள் குறித்து அச்சம் அதிகரித்துள்ளதுடன் சுதந்திரக் கோரிக்கையை விட பாதுகாப்பு முக்கியம் என்ற எண்ணமும் வலுப்பெற்றுள்ளது. இருப்பினு ம்சில தீவிர சுதந்திர ஆதரவாளர்கள் இன்னும் டென்மார்க்கிலிருந்து உடனடி பிரிவை ஆதரிக்கின்றனர். கடந்த காலத்தில் டென்மார்க் மேற்கொண்டதாக கூறப்படும் அநீதிகள் குறித்து அதிருப்தி நீடித்தாலும் தற்போதைய உலக அரசியல் சூழ்நிலையால் கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்த விவாதம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்