சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

தமிழகத்தின் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் “நான் மக்களை விட்டு ஒருபோதும் ஓட மாட்டேன் எனக்கு பணமா அல்லது ஜனமா என்று கேட்டால் எனக்கு எனது ஜனம்தான் முக்கியம்” என்று வலியுறுத்தினார். கரூரில் இடம்பெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக பேசிய அவர் அன்றைய தினம் காவல்துறையினர் சூழ்நிலையை சரியாக கையாளத் தவறியதாகவும்,பின்னர் அந்தச் சம்பவத்திற்கான பழியை தன் மீது சுமத்தி அரசியல் ஆதாயம் தேடப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

மக்களுக்காகவே அரசியலுக்கு வந்ததாகவும், மக்களின் நம்பிக்கைக்கு நன்றி செலுத்துவதே தனது அரசியலின் நோக்கம் என்றும் தெரிவித்தார். மேலும் 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி அளித்துள்ளதாகக் கூறிய அவர் எதிர்காலத்திலும் ஊழல் மற்றும் அரசியல் சதிகளுக்கு மக்கள் நிரந்தரமான பதிலளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்த அவர் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதிலும் ஊழலை ஒழிப்பதிலும் தனது அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் விவசாயிகள் நலன் நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கூறினார். கரூரில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்புக்கு முன்பு நடைபெற்ற வீதிக் காட்சியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்