விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடல்களைத் தொடர்புபடுத்தி கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறித்த இளைஞர் மற்றும் அவருடன் தொடர்புடைய சிலரின் செயற்பாடுகள் மக்களைத் தூண்டிவிடும் வகையில் அமைந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய சூழல் காணப்பட்டதாகவும் இதன் காரணமாக பாதுகாப்பு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் சம்பவம் தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் பின்னணிகளை ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பொதுமக்களின் பாதுகாப்பையும் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.













Leave a Reply