Matara Fire, மாத்தறை – காலி பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முன்பாக அமைந்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இன்று (29) பிற்பகல் திடீரென ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கடை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
தீ வேகமாக பரவியதால் கடைக்குள் இருந்த பெருமளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வர்த்தக உபகரணங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் அருகிலிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். Matara Fire
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் தீ பரவியதற்கான துல்லியமான காரணத்தை கண்டறிவதற்காக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாத்தறை தீயணைப்பு பிரிவினர், மாத்தறை பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அருகில் எரிபொருள் நிரப்பு நிலையம் இருந்ததால் தீ மேலும் பரவாமல் விரைவாக கட்டுப்படுத்தப்பட்டமை பெரிய அனர்த்தம் ஒன்றை தவிர்த்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழப்புகளோ அல்லது காயமடைந்தவர்களோ எவரும் பதிவாகவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேவேளை சொத்துச் சேதத்தின் மதிப்பு தொடர்பான கணக்கீடுகள் நடைபெற்று வருவதுடன் சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042













Leave a Reply