Chaminda Wijesiri, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பதுளை மேல் நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இன்று (28) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
2019 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில் காவல்துறை ஜீப் ஒன்று தங்களை முந்திச் சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது காவல்துறை அதிகாரிகள் இருவரை அச்சுறுத்தியதும் தடுத்துவைத்ததும் மற்றும் உடல்ரீதியான தாக்குதல் மேற்கொண்டதும் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
இந்த வழக்கில் சமிந்த விஜேசிறி அவரது சாரதி பந்துல ரத்நாயக்க மற்றும் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் (MSD) பணியாற்றிய காவல்துறை அதிகாரி ரசிக கருணாதிலக்க ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதில் சமிந்த விஜேசிறியும் அவரது சாரதியும் நான்கு குற்றச்சாட்டுகளிலும் MSD காவல்துறை அதிகாரி மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகள் என நீதிமன்றம் முன்னதாகவே தீர்ப்பளித்திருந்தது. இதேவேளை சாரதி பந்துல ரத்நாயக்க உயிரிழந்துவிட்டதாக விசாரணையின் போது நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













Leave a Reply