Saudi oil attack, ஜேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கியமான கச்சா எண்ணெய் விநியோக மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர். ஹூதி இராணுவ பேச்சாளர் யஹ்யா சாரி வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு சவுதியை செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான யன்பு துறைமுகத்துடன் இணைக்கும் பல முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை யேமன் வான்வெளியில் சவுதி அரேபியா மேற்கொண்டதாக கூறப்படும் ட்ரோன் நடவடிக்கைகளுக்கு பதிலடி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சவுதி அரசின் எண்ணெய் நிறுவனமான அராம்கோ இதுவரை இந்த தாக்குதல் குறித்த உடனடி கருத்தை வெளியிடவில்லை. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, சவுதி அரேபியா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை கிழக்கு மேற்கு குழாய் வழியாக யன்பு துறைமுகத்திற்கு மாற்றி வருகிறது. இந்த மாற்று வழி உலகளாவிய எண்ணெய் விநியோக பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தைகளிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. Saudi oil attack
ஹூதிகள் சவுதி எண்ணெய் தொழில்துறைக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாக எச்சரித்துள்ள நிலையில் சவுதி அரேபியா யேமனின் ஹொடைடா துறைமுகப் பகுதியில் உள்ள ஹூதி இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக தெரிவித்துள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் விநியோக பாதைகளில் ஒன்றான செங்கடல் பகுதியில் நிலவும் இந்த பதற்றம் எரிபொருள் விலைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.













Leave a Reply