சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி, ஜின்தோட்டை நந்தாராம தேரருக்கு பௌத்த கட்டமைப்பின் உயரிய அதிகாரங்களை வழங்கும் நிகழ்வு அரசு மற்றும் எதிர்க்கட்சியின் இணைத் தலைமையில் இடம்பெறவுள்ளது.

பௌத்த மரபுகளின் அடிப்படையில், இலங்கையின் மாபெரும் வம்சங்களில் ஒன்றாக அறியப்படும் அமரபுர ஸ்ரீ கல்யான வம்சக் குழுவின் வட இலங்கை தலைமை சங்கநாயகராக தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி தெரிவாகியுள்ளார்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

அவரிடம் அதிகாரங்களைக் கையளிக்கும் நிகழ்வு கொழும்பில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

விகாராதிபதிக்கு அதிகாரங்கள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித், புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அமைச்சர் சுனில் செனவி ஆகியோர் இந்த நிகழ்வுக்கு இணைத்தலைமை வழங்கவுள்ளனர்.

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமது காணிகளை தம்மிடம் மீள வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இந்த விடயத்துக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறுகின்ற போதிலும் காணிகளின் உரிமையாளர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

அத்துடன், அரசும் பிரதான எதிர்க்கட்சி யான ஐக்கிய மக்கள் சக்தியும் பல்வேறு விடயங்களில் முரண்படுகின்ற போதிலும், தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சர்ச்சையான பின்னணிகளைக் கொண்ட விடயத்தில், ஓரணியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்