சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

தையிட்டி பகுதியில் அமைந்துள்ளதாக கூறப்படும் திஸ்ஸ விகாரை தற்போது உள்ள காணி, காங்கேசன்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்குச் சொந்தமான காணி என நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதகல பதும தேரர் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த உண்மையை நாட்டிலுள்ள பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

அனுமதியற்ற கட்டடம்

மேலும் கருத்து தெரிவித்த நவதகல பதும தேரர்,
“போர் காலத்தில் சிவில் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் கைப்பற்றப்பட்டு, எந்தவித சட்ட அனுமதியும் இன்றி கட்டப்பட்ட இடமே தற்போது ‘திஸ்ஸ விகாரை’ என அழைக்கப்படும் இந்த கட்டிடம். இது உண்மையில் ஒரு போலி திஸ்ஸ விகாரை” என குறிப்பிட்டுள்ளார்.

அமைதியைப் பேண வேண்டும்

இந்த விவகாரம் தொடர்பில் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
“இந்த விடயத்தில் யாரும் கலவரம் செய்ய வேண்டியதில்லை. தமிழ் மக்கள் இதுவரை மிக அமைதியாகவே நடந்துகொண்டுள்ளனர். ஆனால், இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு செய்யப்படும் ஒரு அவமதிப்பாகவே நான் பார்க்கிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, பொதுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்