சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

கனடா மற்றும் லக்சம்பர்க் நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரிடமிருந்து சுமார் 8 மில்லியன் ரூபாயை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் 38 வயதுடைய நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையில் கொலன்னாவாவைச் சேர்ந்த ஃபைஸ் முகமது நஃப்திகர் என்பவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து பெருமளவு பணம் பெற்றதாக தெரியவந்துள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரண்டு பிணைப்பத்திரங்களில் விடுவிக்கப்பட்டதுடன் முறைப்பாட்டாளர்களுக்கு தலா 100,000 ரூபாய் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மல்லாகம் காவல்நிலையத்திலும் குறித்த நபருக்கு எதிராக கூடுதல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்