சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

France Water Restrictions, நீர் பயன்பாட்டு கட்டுப்பாடு

பிரான்சில் 2026 கோடை கால வறட்சி அபாயம் அதிகரித்து வரும் நிலையில், பல département பகுதிகளில் நீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Charente, Charente-Maritime மற்றும் Deux-Sèvres பகுதிகளில் தற்போது Alerte எனப்படும் இரண்டாம் நிலை drought alert அமலில் உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் late spring காலத்தில் மழை குறைவாக பெய்ததும் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை பதிவானதுமாகிய காரணங்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த France Water Restrictions – Alerte நிலையின் கீழ் பகல் நேரங்களில் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. Swimming pool நிரப்புதல் அல்லது மீண்டும் refill செய்வது தடை செய்யப்படலாம்.

வீட்டில் கார் கழுவுதல் vegetable garden களுக்கு நீர் பாய்ச்சுதல் மற்றும் சில விவசாய நீர்ப்பாசன பயன்பாடுகளுக்கும் வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே irrigation செய்ய அனுமதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே வீடுகளில் குடிநீர் மற்றும் சாதாரண household usage தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் Pyrénées-Orientales, Ain மற்றும் Aude போன்ற சில département பகுதிகளில் tap water மீதும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • drought alert கள் நான்கு நிலைகளில் பிரிக்கப்படுகின்றன. முதலாவது Vigilance என்பது மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தும் நிலை.
  • Alerte நிலையில் garden watering swimming pool நிரப்புதல் மற்றும் car washing போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் தொடங்கும்.
  • Alerte renforcée நிலையில் மேலும் கடுமையான தடை விதிக்கப்படும்.
  • Crise நிலையில் குடிநீர் மருத்துவம் மற்றும் பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற நீர் பயன்பாடுகள் பெரும்பாலும் தடை செய்யப்படும்.

இந்த நிலை உருவாக காரணமாக 2026 February மாதத்திலிருந்து மழை அளவு கடுமையாக குறைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Connexion France தகவலின்படி Charente பகுதியில் April மாதத்தில் சாதாரண மழையின் சுமார் 10% மட்டுமே பதிவாகியுள்ளது.

பிரான்ஸ் அரசின் தகவலின்படி நீர் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு €1,500 வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் விதிமீறல் நடந்தால் அபராதம் €3,000 வரை உயரக்கூடும்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading