சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தால் தவறாக நாடுகடத்தப்பட்டதாக கூறப்படும் கில்மார் அப்ரேகோ கார்சியாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த குற்றவியல் வழக்கை அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். எல் சல்வடோர் வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதான கார்சியா முன்பு மனிதக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எதிரான வழக்கு அரசியல் நோக்கத்துடனும் பழிவாங்கும் அணுகுமுறையுடனும் முன்னெடுக்கப்பட்டதாக நீதிபதி கண்டறிந்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளின் கீழ் அவர் தவறாக நாடுகடத்தப்பட்ட பின்னர் சட்டரீதியாக தனது உரிமைக்காக போராடியதற்குப் பதிலடியாகவே இந்த வழக்கு மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதேவேளை இந்த தீர்ப்பு “தவறானதும் ஆபத்தானதும்” என அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் விமர்சித்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வழக்கு அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகள் நீதித்துறை சுயாதீனம் மற்றும் அரசியல் தலையீடு குறித்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்