இஸ்ரேல்–லெபனான் மோதல் தொடரும் நிலையில் நீடித்த மற்றும் உண்மையான போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமெனில் மூன்று முக்கிய அம்சங்கள் அவசியம் என ஹெஸ்புல்லா அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அவரது கருத்துப்படி முதலில் இஸ்ரேல் லெபனான் நிலப்பரப்பில் நடத்தும் தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இரண்டாவதாக லெபனானின் இறையாண்மையை மதிக்கும் வகையில் எல்லை தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
மூன்றாவதாக அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச தரப்புகள் சமநிலையான உத்தரவாதங்களை வழங்கி ஒப்பந்த மீறல்கள் மீண்டும் நடைபெறாத சூழல் உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தங்கள் உண்மையான அமைதியை வழங்கவில்லை தொடர்ந்து தாக்குதல்கள் பதற்றம் மற்றும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லா இடையிலான பதற்றம் மீண்டும் பெரும் மோதலாக மாறக்கூடும் என்ற அச்சமும் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளது.













Leave a Reply