சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தின் சாங்ஜி நகரில் அமைந்துள்ள லியுஷென்யூ நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தின் போது மொத்தம் 247 தொழிலாளர்கள் சுரங்கத்தின் அடிப்பகுதியில் பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப தகவல்களில் 4 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 90 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக கூறப்பட்டாலும் பின்னர் வெளியான தகவல்களில் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதாக சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு அளவை மீறிய கார்பன் மோனாக்சைடு வாயு அளவே விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தவும் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் சீன தலைவர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.













Leave a Reply