நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை அதே இடங்களில் மீண்டும் திறப்பது ஆபத்தானது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பும் கல்வி அதிகாரிகளும் அறிவித்துள்ளனர்.
இதன்போது, அத்தகைய பாடசாலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும், மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய யுனிசெஃப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீட்டெடுப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பிரதமர் மற்றும் யுனிசெஃப் பிரதிநிதிகள் குழுவுக்கு இடையே ஒரு முக்கிய சந்திப்பு நடைபெற்றது. அதில் நாட்டின் கல்வி மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
கண்டி மகாமாயா பாலிகா வித்தியாலயத்திற்கு மேலே உள்ள மண் மேடு பகுதிக்கு வரையிலான நிலச்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில், இது நிலச்சரிவு அல்ல, ஒரு அடுக்கு மண் சரிவாகும் என உறுதி செய்யப்பட்டது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிக்கையில், “பாடசாலைகளை பாதுகாப்பான இடங்களில் மாற்றுதல் முக்கியமானது. மாணவர்களின் பாதுகாப்பும் கல்வி தொடர்ச்சியும் இதன் மூலம் உறுதி செய்யப்படும்” என்றார்.





Leave a Reply