சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

நாட்டின் பொருளாதார நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையிலும் எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் Harini Amarasuriya தெரிவித்துள்ளார். அரச சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் 6ஆவது கூட்டம் இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

நாட்டில் நிலவிய வலுசக்தி நெருக்கடியால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலையான முகாமைத்துவ செயன்முறையை செயல்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மக்கள் மீது கூடுதல் பொருளாதார சுமை ஏற்படாதவாறு வலுசக்தி தொடர்பான செலவுகளை அரசாங்கமே பொறுப்பேற்று நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

குறிப்பாக வெசாக் வாரத்தில் மத மற்றும் கலாசார நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறவுள்ளதால் மின்விநியோகம் தடையின்றி நடைபெற தேவையான திட்டமிடல்களும் தொழில்நுட்ப ஏற்பாடுகளும் முன்னதாகவே செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அரசாங்கத்தின் சரியான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் காரணமாக நாட்டில் பாரிய மின்சார நெருக்கடியை தவிர்க்க முடிந்துள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது வலியுறுத்தினார்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்