வைரல் வீடியோ, இந்தியாவின் பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண் ஒருவர் பல மீற்றர் தூரம் வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் பதிவு செய்து எக்ஸ் (X) சமூக ஊடகத்தில் பகிர்ந்த காணொளியில் மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும்போது பெண் ஒருவர் அதன் கைப்பிடி அல்லது பின்பகுதியைப் பற்றிக்கொண்டு வீதியில் இழுத்துச் செல்லப்படுவது காணப்படுகிறது.
பின்னர் சாரதி மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து பெண்ணுடன் சேர்ந்து கீழே விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்களில் ஒருவர் ஆத்திரமடைந்து மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை தாக்க முயன்ற நிலையில் அருகிலிருந்தவர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவத்தில் இருவருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை அபாயகரமாக இயக்கிய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.













Leave a Reply