சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

கனடா அரசு – 30 நாள் தாண்டினால் இலவச பாஸ்போர்ட் சேவை.

கனடா அரசு 2026 ஏப்ரல் 1 முதல் “30 Days or Free” (30 நாட்கள் அல்லது இலவசம்) என்ற புதிய உத்தரவாத முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி ஒருவர் பாஸ்போர்ட் அல்லது பயண ஆவணத்திற்கு முழுமையான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு 30 வேலை நாட்களுக்குள் (business days) பாஸ்போர்ட் தயாராகவில்லை என்றால் அவர் செலுத்திய கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும். இந்த பணம் தனியாக கோரிக்கை செய்யாமல் தானாகவே (automatic refund) வழங்கப்படும் என்று கனடா அரசு அறிவித்துள்ளது.

இந்த 30 நாள் கணக்கீடு முழுமையான விண்ணப்பம் அரசிடம் கிடைத்த நாளிலிருந்து தொடங்குகிறது. அதாவது விண்ணப்பப் படிவம், தேவையான ஆவணங்கள் சரியான புகைப்படம் மற்றும் கட்டணம் அனைத்தும் சரியாக சமர்ப்பிக்கப்பட்ட பிறகு தான் கால கணக்கீடு ஆரம்பமாகும். பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு சரிபார்க்கப்படும் வரை உள்ள காலமே 30 வேலை நாட்களாக கருதப்படும் அஞ்சல் மூலம் அனுப்பும் காலம் இதில் சேர்க்கப்படாது.

கனடா அரசு சேவையின் தரத்தை உயர்த்தவும் மக்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக பல பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் 10 முதல் 20 வேலை நாட்களுக்குள் முடிக்கப்படுகின்றன. இருப்பினும் சில நேரங்களில் தாமதம் ஏற்படுவதால், அதற்கான பொறுப்பை அரசு ஏற்று இந்த பணத்தை திருப்பி வழங்கும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால் இந்த “30 நாட்கள் அல்லது இலவசம்” உத்தரவாதம் எல்லா சேவைகளுக்கும் பொருந்தாது. அவசர (urgent) மற்றும் விரைவு (express) சேவைகள் தனியான குறைந்த கால வரம்பில் செயல்படுவதால் அவை இந்த திட்டத்தில் சேராது. மேலும் சில நிர்வாக சேவைகள், மாற்று ஆவணங்கள் (replacement documents), குழந்தைகளுக்கான சில பயண ஆவணங்கள் போன்றவை இந்த உத்தரவாதத்தில் அடங்காது. அதேபோல் விசேஷ சூழ்நிலைகள் அல்லது செயல்முறை பாதிக்கப்படும் நிலைகளில் இந்த உத்தரவாதம் பொருந்தாமல் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் அரசு சேவைகளை வேகமாகவும் நம்பகமாகவும் மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும். குடிமக்கள் தேவையான பயண ஆவணங்களை சரியான நேரத்தில் பெற உதவுவது மற்றும் அரசு சேவைகளில் பொறுப்புத்தன்மையை அதிகரிப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading