Sri Lanka News, வட மாகாணத்தில் தென்னம் பொருட்கள் சார்ந்த உற்பத்தி முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தென்னை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்து ரணதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தென்னை உற்பத்தி சார்ந்த சிறு தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர். அரசாங்கத்தின் தென்னை முக்கோண திட்டத்தின் இலக்குகளை முன்னெடுத்து தென்னம் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல், பெறுமதி சேர் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.Sri Lanka News
இலங்கைக்கு தென்னை உற்பத்தி துறையின் மூலம் குறிப்பிடத்தக்க வருமானம் கிடைத்து வருவதாகவும் வட மாகாணத்திலிருந்து பெறப்படும் பங்களிப்பை மேலும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக தும்பு மற்றும் சிரட்டை போன்ற பெறுமதி சேர் உற்பத்திகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் பதிவு செய்யப்படாத உற்பத்தியாளர்கள் தென்னை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்து, அரசாங்கத்தின் மானியங்கள், சலுகைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொண்டு தமது தொழில்களை விரிவுபடுத்த முடியும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். சிறு தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் நிதி வசதி, தொழில்நுட்ப ஆலோசனை, சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி தொடர்பான சவால்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.













Leave a Reply