காலி சிறைச்சாலை வளாகத்திற்குள் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காலி தொடருந்து நிலைய வளாகத்திற்கு அண்மையிலிருந்து இருவர் இந்த பார்சலை சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசிவிட்டு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படுவதுடன் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காவல்துறை விசேட பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் காலி காவல்துறை தலைமையக அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்சலை மீட்டு பரிசோதித்தபோது அதில் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) எனப்படும் 2,180 மில்லிகிராம் போதைப்பொருள் புகையிலை மற்றும் 49 சிகரெட் லைட்டர்கள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
சிறைச்சாலை கைதிகளிடம் இந்தப் பொருட்களை கொண்டு சேர்க்கும் நோக்கிலேயே பார்சல் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விரைவில் கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













Leave a Reply