ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரே அடிப்படை நிபந்தனைகள் ஈரானின் இறையாண்மை மற்றும் உரிமைகள் முழுமையாக மதிக்கப்படுவதுடன் ஈரான்–அமெரிக்கா இடையிலான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும் என ஈரானிய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய மூலோபாய கடற்பாதையில் ஈரானின் உரிமைகளைப் பாதுகாப்பதில் எந்தவித பின்னடைவுமில்லை என்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை உறுதியாகக் காக்க ஆயுதப் படைகள் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.
மேலும் இராணுவ அச்சுறுத்தல்கள் அல்லது வெளிநாட்டு அழுத்தங்கள் மூலம் திணிக்கப்படும் எந்தவொரு ஏற்பாடுகளையும் தெஹ்ரான் ஒருபோதும் ஏற்காது என வலியுறுத்திய அவர் அமெரிக்கா முன்பு ஏற்றுக்கொண்ட புரிந்துணர்வு ஏற்பாடுகளிலிருந்து பின்னர் விலகி ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்று கடற்பாதையை உருவாக்க முயன்றதாக குற்றம்சாட்டினார்.
ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டமைப்பிற்கு வெளியே ஹோர்முஸ் நீரிணையில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் ஈரான் கடுமையான பதிலடி அளிக்கும் என்றும் அழுத்தம் அல்லது ஆக்கிரமிப்பின் மூலம் அந்த முக்கிய கடல்வழிப்பாதையை மீண்டும் திறக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.













Leave a Reply