அமெரிக்கா தனது “ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை” நிறுத்தும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்றும் அதுமட்டுமல்லாது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் நலன்களுக்கு முக்கியமான பிற எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி விநியோகப் பாதைகளும் முடக்கப்படும் அபாயம் இருப்பதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கடுமையாக எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மீண்டும் விதித்துள்ள முற்றுகை மற்றும் அண்மையில் ஈரான் மீது முன்னெடுத்த வான்வழி கடற்படை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்தெந்த சர்வதேச விநியோகப் பாதைகள் பாதிக்கப்படலாம் என்பது குறித்து ஈரான் விரிவான தகவல்களை வெளியிடவில்லை.
இதற்கிடையில் ஜோர்டான் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தனித்தனியாக தாக்குதல்களை நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளில் பலவற்றை தாங்கள் இடைமறித்ததாக அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த புதிய பதற்றம் மத்திய கிழக்கில் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோக நிலைத்தன்மை குறித்த கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.













Leave a Reply