1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் வெறுமனே ஒரு கலவரமாக அல்லாது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் பொருளாதாரம் வாழ்விடங்கள் மற்றும் சொத்துக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும் சுமார் 5,000 தமிழர்கள் உயிரிழந்ததாகவும் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி தங்கத்துரை உள்ளிட்ட தமிழ்க் கைதிகள் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாகவும் அதற்கான பல வரலாற்றுச் சாட்சிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை படுகொலையையும் அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையும் ஒன்றாக ஒப்பிட முடியாது என வலியுறுத்திய அவர் அக்காலத்தில் நடைபெற்ற கொடூரங்களும் அதன் பின்னணியில் இருந்த அரசியல் சூழ்ச்சிகளும் குறித்து வரலாற்று ஆதாரங்களுடன் விரிவாக விளக்கியுள்ளார்.













Leave a Reply