உணவுக்கான டிக்கெட் – ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவற்றை பயன்படுத்த முடியும்.
பிரான்ஸ் அரசின் புதிய திட்டத்தின் படி உணவுக்கான டிக்கெட் (Titres-restaurant) பயன்படுத்தும் அனைத்து ஊழியர்களும் இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவற்றை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் வர்த்தகம் மற்றும் கொள்முதல் திறன் தொடர்பான அமைச்சர் Serge Papin இந்த மாற்றத்தை அறிவித்துள்ளார்.
இந்த முடிவு அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு கூடுதல் நிதி சுதந்திரத்தை வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரான்சில் சுமார் 5 மில்லியன் ஊழியர்கள் உணவுக் கூப்பன்களை பயன்படுத்தி உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் வாங்குகின்றனர். புதிய திட்டத்தின் கீழ் இக்கூப்பன்களை சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவுப் பொருட்கள் வாங்கவும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றத்தை சட்டமாக கொண்டு வர அரசாங்கம் விரைவில் மசோதாவை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பொருளாதார சிரமங்கள் இருக்கும் நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் எடுக்கப்பட்டதாகவும், கூப்பன்கள் பெரும்பாலும் உணவு தொடர்பான கடைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.













Leave a Reply