கிரீஸ் அரசு புதிய “இமிக்ரேஷன் சட்டம்” ஒன்றை நிறைவேற்றி சட்டவிரோத குடியேற்றம் மற்றும் அனுமதி இன்றி தங்குவதற்கான தண்டனைகளை கடுமைப்படுத்தியுள்ளது.
இந்தச் சட்டத்தின் படி குடியேற்ற அனுமதி இல்லாமல் நாட்டில் தங்குவோர் குற்றவாளிகளாகக் கருதப்படுவர் குறைந்தது €5,000 அபராதத்துடன் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற 14 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். முன்பு 120 நாட்கள் இருந்த விருப்ப வெளியேற்ற (voluntary departure) காலம் இப்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோதமாக தங்குவோரின் நடத்தை கண்காணிக்க மின்கண்காணிப்பு (electronic monitoring) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிர்வாகத் தண்டனை (detention) காலம் 18 மாதங்களிலிருந்து அதிகபட்சம் 24 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டத்தை மனிதாபிமானக் கோணத்தில் விமர்சித்தாலும், தேசிய பாதுகாப்பையும் சட்டவிரோத குடியேற்றத்தையும் கட்டுப்படுத்த இது அவசியம் என கிரீஸ் அரசு வலியுறுத்துகிறது.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042













Leave a Reply