சீனாவில் தொலைதூர புல்வெளிப் பகுதியில் ஆடுகளை மேய்க்கும் வேலைக்கு வெளியிடப்பட்ட ஒரு சாதாரண வேலைவாய்ப்பு விளம்பரம் சமூக ஊடகங்களில் வைரலாகி நாட்டின் வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் அழுத்தங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. மங்கோலியா எல்லைக்கு அருகிலுள்ள பண்ணை உரிமையாளர் சுவோ சியாவோயோங் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு 700-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர் இதில் ஷாங்காய் சோங்க்சிங் போன்ற பெரிய நகரங்களிலிருந்து வந்த வெள்ளைக்காலர் ஊழியர்கள் தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக பட்டதாரிகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.
மாதம் 8,000 யுவான் சம்பளம் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும் இந்த வேலை கடுமையான குளிர் நீண்ட நேர உழைப்பு மற்றும் தனிமையான வாழ்க்கையை கொண்டிருந்தாலும் நகர வாழ்க்கை அழுத்தம் “996” வேலை கலாசாரம் குறைந்த வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை காரணமாக பலர் ஆர்வம் காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் வேலைவாய்ப்பு போட்டி அதிகரிக்கும் குறைவேலைவாய்ப்பு செயற்கை நுண்ணறிவு தாக்கம் மற்றும் சாதனை அளவிலான புதிய பட்டதாரிகள் வேலை தேடும் சூழல் காரணமாக தொழிலாளர் சந்தை மேலும் சவால்களை எதிர்கொள்வதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்













Leave a Reply