போலி GovPay இணையதளம் மற்றும் போக்குவரத்து அபராத SMS மோசடிகள் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை அரசின் GovPay டிஜிட்டல் கட்டண சேவையைப் போல தோற்றமளிக்கும் போலி இணையதளங்கள் மற்றும் குறுந்தகவல்கள் (SMS) மூலம் பொதுமக்களின் பணம் மற்றும் வங்கி தகவல்களை மோசடிக்காரர்கள் திருட முயற்சித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, சிலருக்கு “வேக வரம்பை மீறியுள்ளீர்கள்” அல்லது “போக்குவரத்து விதிமீறல் செய்துள்ளீர்கள்” எனக் கூறி குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன. அதில் இடம்பெறும் இணைப்புகளை அழுத்தி அபராதத்தை உடனடியாக செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அவை அனைத்தும் அதிகாரப்பூர்வமான GovPay சேவையுடன் தொடர்பில்லாத போலி இணையதளங்களாகும்.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பொலிஸார் சம்பவ இடத்திலேயே சாரதிக்கு தகவல் வழங்கி சட்டப்படி அபராத நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் CCTV கமரா மூலம் விதிமீறல் பதிவானாலும் வங்கி கணக்கு விவரங்களை கோரும் வகையிலோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற இணையதள இணைப்புகள் மூலம் பணம் செலுத்துமாறு SMS அனுப்பப்படாது என்றும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே சந்தேகத்திற்கிடமான SMS WhatsApp அல்லது வேறு எந்த இணைப்பையும் திறக்க வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களில் வங்கி அல்லது அட்டை விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இத்தகைய மோசடிக்கு இலக்கானவர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான தகவல்களை பெற்றவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042













Leave a Reply