சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

இத்தாலி வெப்ப அலை தொடர்ந்துவரும் நிலையில், நாட்டின் சுகாதார அமைச்சகம் 16 நகரங்களுக்கு மிக உயர்ந்த நிலையான சிவப்பு எச்சரிக்கை Level 3 Red Alert அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் தேவையற்ற வெளிப்புற பயணங்களைத் தவிர்க்குமாறும் குறிப்பாக நண்பகல் நேரங்களில் அதிக வெப்பத்திற்கு ஆளாகாமல் இருக்குமாறும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ள நகரங்களில் போலோனியா (Bologna) பிரெஷ்யா (Brescia) காக்லியாரி (Cagliari) கம்போபாசோ (Campobasso) ஃப்ளாரன்ஸ் (Florence) ஃப்ரோசினோனே (Frosinone) ஜெனோவா (Genoa) லத்தினா (Latina) மிலான் (Milan) பாலெர்மோ (Palermo) பெரூஜியா (Perugia) பெஸ்காரா (Pescara) ரியெட்டி (Rieti) ரோம் (Rome) டுரின் (Turin) மற்றும் விட்டர்போ (Viterbo) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இத்தாலி சுகாதார அதிகாரிகள் முதியவர்கள் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், நேரடி சூரிய ஒளியைத் தவிர்த்தல் குளிரூட்டப்பட்ட இடங்களில் தங்குதல் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் அடுத்த நாட்களில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சிவப்பு எச்சரிக்கை நகரங்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலிக்கு சுற்றுலா அல்லது பிற காரணங்களுக்காக பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் பயணத்திற்கு முன் உள்ளூர் வானிலை மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கட்டாயம் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்