கம்பளை கொலை, – கீரபனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (28) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கீரபனை பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான தகவலை அடுத்து கம்பளை காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆரம்பகட்ட விசாரணைகளில் உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதன் விளைவாக 43 வயதுடைய சந்தேகநபர் மன்னாக் கத்தியால் தாக்கி இந்தக் கொலையை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்













Leave a Reply