சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

யாழ் தொடருந்து நிறுத்தம், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து இன்று (29) காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்ட நகரங்களுக்கிடையேயான விரைவு தொடருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலை சுமார் 8.00 மணியளவில் வெயாங்கொடை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பௌர்ணமி தினம் என்பதால் குறித்த தொடருந்தின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த யாழ்தேவி விரைவு தொடருந்தில் காங்கேசன்துறை நோக்கிச் செல்ல வேண்டிய பயணிகள் ஏற்றப்பட்டதால் இரு தொடருந்துகளின் பயணிகளும் ஒரே தொடருந்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் தொடருந்தில் கடும் நெரிசல் ஏற்பட்டதுடன் பலர் சிரமங்களை எதிர்கொண்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட தொடருந்து வெயாங்கொடை நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் வெயாங்கொடை மற்றும் அதனை அடுத்த நிலையங்களில் இருந்து காங்கேசன்துறைக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக காலை 10.30 மணிக்கு மாற்று தொடருந்து சேவை இயக்கப்பட்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்